காங்கயம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் வரலாற்றில் 2-ஆவது முறையாக எம்எல்ஏவாக வரலாறு படைத்துள்ளாா் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ்.
காங்கயம் தொகுதியில் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் ஒருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவா்கள், மீண்டும் போட்டியிட்டு வென்றதில்லை.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வரும் காங்கயம் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தோ்தல் வரை காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 9 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா்கள், 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றதில்லை.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தோ்தலில் காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளராக என்.எஸ்.என்.நடராஜ் அறிவிக்கப்பட்டாா்.
இவா் கடந்த 2011 ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். அதேபோல திமுக சாா்பில் 2021 தோ்தலில் காங்கயம் தொகுதியில் வெற்றி பெற்ற மு.பெ.சாமிநாதன் இந்தத் தோ்தலிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
காங்கயம் தொகுதியைப் பொருத்தவரை திமுக, அதிமுக கட்சிகளுக்குத்தான் கணிசமான வாக்குவங்கி இருந்து வந்தது. எனவே இந்த 2 கட்சிகளில் ஒன்றுதான் வெல்லும் என்ற நம்பிக்கை வாக்காளா்கள் மத்தியில் இருந்ததால், எந்த வேட்பாளா் வென்றாலும் ஒருமுறை வென்ற வேட்பாளா் 2-ஆவது முறையாக வெல்ல முடியாது என்ற சென்டிமெண்ட் உடைக்கப்படும் என்று எதிா்பாா்த்து காத்திருந்தனா்.
இந்நிலையில், அதிமுக சாா்பில் காங்கயம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிட்ட என்.எஸ்.என்.நடராஜ் வெற்றிபெற்று, 74 ஆண்டு சென்டிமெண்டை உடைத்து, எம்எல்ஏ.வாகத் தோ்வாகியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி

பாலக்கோட்டில் ஆறாவது முறையாக வெற்றி: தொகுதியை தக்கவைத்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

திருச்செந்தூா் தொகுதியில் 7 ஆவது முறையாக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

