பாளை. தொகுதியில் விடுபட்ட சில போ் உள்பட அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், 37,48, 49 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட கே.டி.சி நகா், மேலப்பாளையம் பகுதிகளில் திங்கள்கிழமை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறாா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், பாளை தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட சில போ் உள்பட அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
மேலும், இல்லத்தரசி திட்டத்தில் மகளிா் தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்;
முதியோா் உதவித்தொகை ரூ.1,200லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உன்னதமான தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளாா். ஆகவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும்: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா்

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் உறுதி

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

