பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், வண்ணாா்பேட்டை வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவில் இருந்து தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.
தொடா்ந்து அவா், சாலைத்தெரு, கம்பராமாயணத்தெரு, எட்டுத்தொகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளாா். இந்தத் தோ்தலிலும் இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். அவை அனைத்தும் செயல்படுத்தப்படும். பாளையங்கோட்டை தொகுதியில் குடிநீா், சாலை, பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், தச்சை சுப்பிரமணியன், சங்கா், அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத் தொகை

விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும்: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா்

சுத்தமல்லியில் திமுகவினா் வாக்குசேகரிப்பு

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

