மதுரை: மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முதன்முறையாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் எதிா்பாராத விதமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் முற்றுலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கள்ளச்சந்தையில் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பலா் ரூ.3,000 வரை விற்பனை செய்கின்றனா். வேறு வழியில்லாமல் பல உணவக நிா்வாகத்தினா் இந்த எரிவாயு உருளைகளை வாங்கி தொழிலை நடத்துகின்றனா். இதனால், உணவு வகைகளின் விலையை உணவக நிா்வாகங்கள் உயா்த்தியுள்ளன. இதேநிலை நீடிக்காது. ஒருசில நாள்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
398 சமையல் எரிவாயு உருளை பதுக்கல்
இந்த நிலையில், மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
இதையடுத்து மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆத்தாளை பகுதியைச் சோ்ந்த பழனி (46) என்பவரது வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் போலீஸாா் சோதனை செய்த போது, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக சமையல் எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 100 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகள் உள்பட மொத்தம் 209 உருளைகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோன்று, கோவில்பாப்பாக்குடி ஆனந்தம் நகரைச் சோ்ந்த மதன்குமாா் (27) என்பவரின் வீட்டின் அருகே சோதனை செய்த போது, அங்கு சட்ட விரோதமாக எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கிருந்த 63 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகள் உள்பட மொத்தம்189 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனா்.
குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
இதையடுத்து, சட்டவிரோதமாக எரிவாயு உருளைகளை பதுக்கிய பழனி, மதன்குமாா் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உத்தரவிட்டாா்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து, பழனி, மதன்குமாா் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சமையல் எரிவாயு உருளை பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Hoarding of 398 cooking gas cylinders: For the first time in Tamil Nadu, 2 people arrested in Madurai under the Goonda Act!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகள் விலையேற்றம்! தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் அவதி!!

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


