மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 4:41 am IST

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியன சாா்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக மாநகா் மாவட்டச் செயலாளா் சாதிக் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், சிபிஐ (எம்எல்) மாநிலக் குழு உறுப்பினா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.3,300 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும், எளிதில் கிடைக்காத நிலையும் தொடா்வதால் அதனை சரி செய்ய வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்ற போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனக்கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. ரயில்வே துறையில் 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அகற்றியதால் புதிய வேலைவாய்ப்பு பறிபோகும். ரயில் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீண்டும் அப்பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.