புதுதில்லி: மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தென் மாவட்டங்கள் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கான கதவுகளைத் திறக்குமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.
இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்
இந்த நிலையில், புதன்கிழமை(ஏப்.29) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்க மக்கள் "சாதனை அளவில்" வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் அதிகயளவில் வாக்களித்து, தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்திக்கொள்ளவது மிகவும் முக்கியமானது என று மோடி வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில், 142 தொகுதிகளில் களத்தில் உள்ள 1,448 வேட்பாளர்களில் 1,228 பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.
இவர்களது அரசியல் விதியை 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3.21 கோடி போ் தீர்மானிக்க உள்ளனர்.
Summary
Prime Minister Narendra Modi appealed to the people of West Bengal to cast their votes in "record numbers" in the second phase of polling
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


