திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதில், ஆளும் திரிணமூல் காங்கிரஸை விட எதிர்க்கட்சியான பாஜக சற்று முன்னிலையில் இருப்பதாகப் பல தொலைக்காட்சி சேனல்களின் ஆரம்பகட்ட நிலவரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பட்டாச்சார்யா கூறுகையில், "மாநில மக்கள் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் அரசை நிராகரித்துவிட்டனர்.
மமதா பானர்ஜிக்கும் மக்களுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில், மக்கள் மமதா பானர்ஜியைப் புறக்கணித்துவிட்டனர் என்பதை இன்னும் சில மணிநேரங்களில் கிடைக்கும் பெரும்பான்மையான இடங்களின் முடிவுகள் உறுதிப்படுத்தும்," என்றார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. பல்வேறு விதிமீறல்களால் ஃபால்டா தொகுதியில் மட்டும் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 77 மையங்களில் நடைபெறவுள்ளது.மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இவ்விரு கட்சிகளும் பலப்பரீட்சை நடத்துவதால், தோ்தல் முடிவுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
Summary
West Bengal BJP president Samik Bhattacharya said he was confident of a landslide victory, as counting of votes for the assembly elections began on Monday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


