இந்தோனேசியாவில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் பலியாகியுள்ளார், கட்டங்கள் சேதமடைந்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தோனேசியாவின் டெர்னேட் நகரின் 119 கி.மீட்டருக்கு மேற்கு-வடமேற்கே மொலுக்கா கடற்பரப்பில் 35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் வியாழக்கிழமை காலை 6.48 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 75 செ.மீ(2.5 அடி) உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்ததை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மிகப்பெரிய அலைகள் கடலில் எழுந்ததாகவும், கட்டடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
அதன் பிறகு அது குறைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் மிகத் தீவிரமாக உணரப்பட்டன. நகரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் மீட்புப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 1000 கிலோமீட்டர்(621 மைல்கள்) சுற்றளவிற்குள், இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்கரைப் பகுதிகளுக்கு ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹவாயைத் தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முதலில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணி நேரத்திற்குள், சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மினஹாசாவில் 75 சென்டிமீட்டர், பிடுங் நகரில் 20 சென்டிமீட்டர், வடக்கு மொலுக்கா மாகாணத்திலும் 30 சென்டிமீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்ததாக இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, இந்தோனேசியாவின் டெர்னேட் கடற்கரைப் பகுதிக்கு அப்பால், 74 மைல்கள் தொலைவில் 7.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா மற்றும் அதன் அண்டை நாடுகள் புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பசிபிக்‘நெருப்பு வளையம்’என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கின்றன. இது ஜப்பானிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக பசிபிக் படுகை வரை நீண்டு கிடக்கும் புவித்தட்டுகள்(டெக்டோனிக்) மோதும் தீவிர நில அதிர்வு செயல்பாடு கொண்ட ஒரு வளைவாகும்.
குறைந்த அளவிலான மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
Summary
A major 7.4-magnitude quake struck off the coast of eastern Indonesia on Thursday, killing at least one person, causing waves of up to 75 centimetres (2.5 feet) and triggering a tsunami warning that was subsequently lifted.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

