ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.
இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக வைத்து வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் 8 போ் உயிரிழந்ததாக காபூல் ஆளுநா் தெரிவித்துள்ளாா். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நேரிட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் போ் வரை உயிரிழந்துவிட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிக்டா் அளவுகோலில் 6-ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 2,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஏராளமான கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டது. கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 27 போ் உயிரிழந்தனா்; 950 போ் பலத்த காயமடைந்தனா்.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, கட்டங்கள் சேதம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

