தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம் பற்றி...

News image

நிலநடுக்கம் - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:45 pm IST

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுத்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு ஜப்பானின் இவாத்தே மாகாணம் அருகே பசிபிக் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை மாலை 4.53 மணியளவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியா வரை உணரப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் 10 அடி வரை அலைகள் எழும் அபாயம் இருப்பதாக ஜப்பான் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான கட்டடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், சுனாமி அலைகள் அடுத்தடுத்து தாக்கும் அபாயம் இருப்பதால் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுடன் பேசிய ஜப்பான் பிரதமர், நெருக்கடி நிலையைக் கையாள மேலாண்மைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தல்களைக் கேட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசால் வெளியிடப்படவில்லை.

Summary

Massive Earthquake in Japan! Tsunami Warning Issued!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.