மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் புதுவை வருகை குறித்து...

News image

தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி. - படம்: எக்ஸ்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:33 pm IST

புதுவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப். 6 ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வருகைதரவுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கட்சிகளிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, மொத்தமுள்ள 30 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16-ம், திமுகவுக்கு 14-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திமுக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து ஒரு இடத்தை விசிகவுக்கு ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால் விசிக மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் தவிர, திமுக போட்டியிடும் 6 தொகுதிகளில் நட்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவதால், மாநிலத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரத்திற்கு அடுத்தடுத்து புதுச்சேரி வர உள்ளனர்.

பிரதமர் மோடி, ஏப். 3-ஆம் தேதி மாலை சாலைப்பேரணி (ரோடு ஷோ) நடத்துகிறார். அன்றைய நாள் காலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துகிறார். மரப்பாலம், வில்லியனூா் உள்ளிட்ட 3 இடங்களில் அவரது பிரசாரம் நடைபெறுகிறது.

தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய 4 ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரும் சாலைப்பேரணி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்றைய நாள் பாஜக முன்னாள் தமிழக தலைவர் கே. அண்ணாமலையும் புதுச்சேரிக்கு வருகிறார்.

ஏப். 5 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி அண்ணா திடலில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அன்றைய நாள் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். 6 ஆம் தேதி மாலை மண்ணாடிப்பட்டு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிரசாரம் செய்கிறார்.

அன்றைய நாள் மாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், புதுவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப். 6 ஆம் தேதி ராகுல் காந்தி புதுச்சேரி வருகிறார்.

இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

Summary

Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha and a Congress MP, is scheduled to visit Puducherry on April 6th for election campaigning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.