அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தர், தன் நண்பரான டாக்டர் கந்தசாமியைப் பார்க்கச் சென்றார். எப்போதும் அதி புத்திசாலித்தனமாகப் பேசி சுந்தரை வறுத்தெடுக்கும் டாக்டர் கந்தசாமி அன்று புதிய தலைப்பைத் தொடங்கினார்.
'கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்பதுதான் அது!
திடீர் நாத்திகவாதி போல ஆரவாரமாய்ப் பேசினார் கந்தசாமி. 'எதுக்கு உலகத்துல இவ்வளவு வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, சண்டை, பூசல், ஏற்றத் தாழ்வு எல்லாம்?...கடவுள் இருந்தால் இதெல்லாம் நடக்குமா? இருந்தாலும் அவருக்குக் கருணை இல்லைன்னுதானே அர்த்தம்?'' என்று அடுக்கடுக்காக வாதங்களை அடுக்கி கடவுள் இல்லை என்று பேசினார்.
சுந்தர் கடவுள் நம்பிக்கை உடையவர்.
எனினும் வீண் விவாதத்தைத் தவிர்க்கும் பொருட்டு பேசாமல் இருந்தார். ஆனால் கந்தசாமி விடுவதாக இல்லை!....'பாருங்களேன்!....வெறுப்பு, பயம், பொறாமை, அதிக ஆசை எல்லாம் உலகில் மண்டியிருக்கிறது...
கடவுள்னு ஒருத்தர் இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? என்ன?...நான் சொல்றது சரிதானே?''
சுந்தரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! 'உலகில் டாக்டர்னு யாருமே இல்லை!'' என்றார் சுந்தர்.
'ஏன் நானே டாக்டர்தானே!.....'' என்று கோபமாகவே கேட்டார் கந்தசாமி.
'அப்புறம் இந்த உலகில் ஏன் இவ்வளவு நோய்கள்.....நோயாளிகள்...,டாக்டர்னு ஒருத்தர் இருந்தா இப்படி நடக்குமா?'' என்று கேட்டார் சுந்தர்.
'நோயாளிகள் எங்களைப் போன்ற டாக்டர்களிடம் நம்பிக்கையுடன் வந்தால்தானே நோயைச் சரி செய்ய முடியும்?''
'அதைப் போலத்தான்! கடவுளிடம் நம்பிக்கையுடன் சென்றால்தானே அவர் கருணை புரிவார்?'' என்றார் சுந்தர். வேறு வழியில்லாமல் வாயடைத்துப் போனார் கந்தசாமி.
Summary
A moral story that children should know
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

நீதிக் கதைகள்! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம்!

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!

நீதிக் கதைகள்! உண்மையான ஏழை யார்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


