மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீதிக் கதைகள்! உண்மையான ஏழை யார்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image

நீதிக் கதைகள்! - படம்: கோப்பிலிருந்து...

Updated On :6 ஏப்ரல் 2026, 4:31 pm IST

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க நினைத்தார். கிராமத்தில் உள்ள ஓர் ஏழையின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரு தினங்கள் அங்கே இருவரும் தங்கினர். பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும் தன் மகனிடம் 'மகனே! ஏழை எப்படி வாழ்கிறான்?' எனக் கேட்டார்.

அதற்கு மகன், "அப்பா, நம் வீட்டில் ஒரே ஒரு நாய்தான் இருக்கிறது. கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஒன்றிரண்டு விளக்குகள் வைத்துள்ளோம்.

அந்தக் கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகின்றன. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரியது. ஆனால், அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது.

நாம் ஒரு நாள் கழிந்த பாலைப் பருகுகிறோம். அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலைக் கறந்து சாப்பிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். அவர்கள் அன்றன்றைக்குச் செடியில் இருந்து பறித்து பச்சைப் பசேல் என இருக்கும் காய்கறிகளையே உண்ணுகிறார்கள்.

நாம் வீட்டைச் சுற்றி காம்ப்பெளன்ட் கட்டிப் பாதுகாக்கிறோம். அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது” என்று சொல்லிகொண்டே போனான்.

மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடையச் செய்தது. 'யார் உண்மையான ஏழை' என்று தந்தை சிந்திக்கத் தொடங்கினார்.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.