ஒரு அம்மாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் குடைகளைச் சரி செய்பவன். இளையவன், பனை மட்டையால் விசிறி செய்து விற்பவன். இரண்டு மகன்களும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை அம்மாவிடம்தான் கொடுப்பார்கள்.
மழைக்காலம் வரும்போது அம்மா,'மூத்தவனின் தொழில் நன்றாக நடக்கும். இந்த மழைக்காலம் முடியும் வரை வருமானத்திற்குக் குறைவிருக்காது!'' என்று நிம்மதியடைவார்கள். ஆனால் மழை பெய்யத் தொடங்கினால் அம்மாவுக்குக் கவலை வந்துவிடும்.
'என் இளைய மகனின் விசிறிகளை மழைக்காலத்தில் யாரும் வாங்க மாட்டார்களே!' என்று வருந்துவார்கள்.
அந்த அம்மா, மழைக்காலத்தில் இளைய மகனைக் குறித்தும், கோடை காலத்தில் மூத்த மகனைக் குறித்தும் கவலைப்படுவார்கள். ஒரே சமயத்தில் இரண்டு மகன்களைக் குறித்தும் மகிழ்ச்சி கொள்ளும் நாள் வராதா என்று அவர்களுக்கு ஏக்கமாக இருந்தது.
அம்மா அமைதியாக யோசித்து இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.
கோடைகாலத்தில் தங்கள் அம்மாவின் யோசனைப்படி மூத்தவனும் இளையவனும் சேர்ந்து விசிறி விற்றார்கள். தனி ஆளாக இருந்து விசிறி வியாபாரம் செய்ததைவிட இப்போது இரண்டு மடங்கு அதிகமாக லாபம் கிடைத்தது.
மழைக்காலத்தில் இருவரும் சேர்ந்தே குடைகளைச் சரி செய்தார்கள். அதிலும் அவர்களுக்கு முன்பைவிட அதிகமான வருமானம் கிடைத்தது. அந்த இளைஞர்கள் தங்கள் அம்மாவின் முடிவை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள்.
கொஞ்சம் ஆழ்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் நாமே தீர்வு கண்டுபிடித்துவிட முடியும். நம்மால் முடிவெடுக்க முடியாதபோது, நமக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையைத் தயக்கமின்றி கேட்டுப் பெறலாம்!
Summary
A moral story that children should know.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

நீதிக் கதைகள்! உண்மையான ஏழை யார்?

நீதிக் கதைகள்! கிணற்றைத்தானே விற்றேன், தண்ணீரை அல்ல!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


