தலைகீழாக ஒரு மரம் வளர்கிறது என்கிறார்களே, அது உண்மையா?
பார்ப்பதற்குத் தலைகீழாக வளர்ந்திருப்பது போலத் தெரியும், அவ்வளவுதான். ஆப்பிரிக்காவில் உள்ள 'பாவோ பாப்' (போபோப் மரங்கள் என்றும் கூறுவர்) மரங்கள். நம்ம மதுரையில்கூட உள்ளன.
உலகளவில் அழிவின் விளிம்பில் உள்ள அரிதான மரம் இது.
பாவோபாப் மரங்களில் உள்ள 9 இனங்களில் 6 மடகாஸ்கர் தீவு மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அதிக அளவில் உள்ளன.
அடன்சோனியா என்ற அறிவியல் பெயர் கொண்ட பாவோபாப் விதைகளை நம் நாட்டிற்கு 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர், பிரிட்டிஷார் கொண்டு வந்தனர்.
மரத்தின் கீழ் பாகம் அகலமாகவும் கிளைகள் வேர்களைப் போல சிறிது சிறிதாக பல நெளிவுகளைக் கொண்டதாக இருக்கும்.
மரத்தின் பட்டைகள் பல ஆயிரம் லிட்டர் நீர் சேமிக்கும் தன்மை கொண்டவை. ஆப்பிரிக்க யானைகள் பட்டைகளைக் கரும்பு போல் தின்று தண்ணீர் குடிக்குமாம். இதன் காய்களில் இருந்து ஒருவித சர்பத் போன்ற பானம் செய்து குடிப்பார்கள். மரத்தை வெட்டினால் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.
அதிகபட்சம் 60 அடி உயரம், 4 மீட்டர் அகலம் வரை வளரும். அழகுக்காக வளர்க்கும் மரமாக இருந்தாலும் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, காற்றை சுத்தமாக்குவதில் இது பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
About rare information that children should know
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

வழி காட்டி உதவுங்கள்!

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


