யானைகளுக்கு மட்டும் ஏன் அவ்ளோ பெரிய காதுகள்?
உலகின் மிகப் பெரிய விலங்கினமான யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை, தந்தம், காதுகள்தான். சரி, இந்தக் காதுகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்?
சில யானைகளின் காதுகள் 22 அடி நீளம் வரை இருக்கும். இவை அதன் கேட்கும் திறனை அதிகரிப்பதில்லை. எல்லோருக்கும் கேட்பது போலத்தான் அதற்கும் கேட்கும். இந்தக் காதுகளின் சிறப்பம்சம்: யானையின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்குத்தான் இவ்ளோ பெரிய காதுகள்!
சாதாரணமாக யானைகள் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற மிகவும் வெப்பமான பிரதேசங்களில் வாழ்கின்றன. யானை இருக்கும் சைசுக்கு (அளவுக்கு) எப்போதும் குளிர் காற்று வீசினால்தான் அதன் உடம்பைக் குளிர்ச்சியாக, வெப்பத்தினால் ஏதும் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள முடியும்.
வெப்பப் பிரதேசங்களில் இந்தச் சலுகை யானைக்குக் கிடைப்பதில்லை. மேலும் நீருக்குள் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து உடம்பைக் குளிரச் செய்து கொள்ளவும் வெப்பமான இடங்களில் நீர் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
ஒரே வழி, பெரிய விசிறிதான். அந்த விசிறியாகப் பயன்படுகிறது யானையின் காதுகள். அதனால்தான் யானை எப்போதும் தனது காதுகளை இப்படியும் அப்படியுமாக அசைத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தனது உடம்பின் வெப்ப நிலையைச் சமன்படுத்திக் கொள்கிறது.
Summary
About rare information that children should know
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இது தெரியுமா? மின்சாரக் கம்பிகளில் காக்கை குருவிகளுக்கு ஷாக் அடிக்காதது ஏன்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


