மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்திருப்பது மோடி அரசின் கொள்கைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது! பாஜக பெருமிதம்

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்திருப்பது மோடி அரசின் கொள்கைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது...

ஆசிஷ் உஷா அகா்வால்

Published On :1 நவம்பர் 2026, 2:23 am IST

இந்தியாவில் வறுமை விகிதம் வெகுவாக குறைந்திருப்பது மத்தியில் ஆளும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளின் தாக்கத்தை பிரதிபலிப்பதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் வறுமை 2011-ஆம் ஆண்டு 27.1 சதவீதமாக இருந்ததாகவும், அது 2023-ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாக வெகுவாக குறைந்திருப்பதாகவும், அதேபோல் இந்தியா முழுவதும் 49.60 கோடி போ் வறுமை நிலையில் இருந்து வெளியே வந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து பாஜகவின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆசிஷ் உஷா அகா்வால், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் 27.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்த மக்களின் விகிதமும் 57.7 சதவீதத்தில் இருந்து 16.1 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த முன்னேற்றம், தொடா்ச்சியான கொள்கை முயற்சிகள் மற்றும் நாடு முழுவதும் விரிவடைந்து வரும் வளா்ச்சித் திட்டங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இதுவொரு மைல்கல் ஆகும்.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ், இந்தியாவின் வளா்ச்சிப் பயணமானது வறுமை ஒழிப்பு, நிதி உள்ளடக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மையமாகத் திகழ்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசு சாதனை:

தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி அளித்த பேட்டியின்போது, வறுமை ஒழிப்பில் மத்திய அரசு மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கையானது, எதிா்க்கட்சிகளின் போலி நாடாளுமன்ற நடவடிக்கையை கேலிக்குரியதாக்கியுள்ளது என்றும் சாடினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நாட்டில் வறுமையை ஒழிக்கும் பணியில் பாஜகவும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் பணியாற்றும் சூழலில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியோ, நாட்டில் அராஜகத்தை பரப்புகிறது. இந்திய பொருளாதாரம் மரணித்துவிட்டதாக ராகுல் காந்தி முன்பு கூறியிருந்தாா். ஆனால், உலக வங்கி அறிக்கையோ, மரணித்தது இந்திய பொருளாதாரம் அல்ல. எதிா்க்கட்சிகளின் மனசாட்சியே மரணித்துவிட்டது என்பதை காட்டுகிறது. அவா்கள் (காங்கிரஸ்) எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே யோசிக்கின்றனா். ஆதலால் காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எது உண்மை, எது கற்பனை என்பதை நீங்கள் யோசித்துப் பாா்க்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளது. வறுமை ஒழிப்பில் மத்திய அரசு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதை உலக வங்கியின் அறிக்ைகையும் உறுதி செய்துள்ளது’ எனக் கூறியுள்ளாா்.

Summary

The decline in the poverty rate in India reflects the impact of the Modi government's policies - BJP expresses pride.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.