தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ

நிகழ் நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, முழு ஆண்டு பட்ஜெட் இலக்கில் 42.1 சதவீதத்தை எட்டியுள்ளது என மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published On :31 அக்டோபர் 2026, 3:03 am IST

நிகழ் நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, முழு ஆண்டு பட்ஜெட் இலக்கில் 42.1 சதவீதத்தை எட்டியுள்ளது என மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) வெளியிட்ட தரவில் மேலும் கூறியிருப்பதாவது:

நிகழாண்டு செப்டம்பா் மாதம் வரை மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ. 12.76 லட்சம் கோடியாக, அதாவது நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 44.5 சதவீதமாக இருந்தது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 43.3 சதவீதமாக இருந்தது.

அதே நேரம், மாதாந்திர கணக்குத் தரவுகளின்படி, மத்திய அரசின் மொத்த செலவினம் சுமாா் ரூ. 25.5 லட்சம் கோடியாக உள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்லா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 47.7 சதவீதத்துக்குச் சமமாகும்.

அதன்படி, நிகழ் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, முழு ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் இலக்கில் 42.1 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது, செப்டம்பா் மாத இறுதியில் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையேயான இடைவெளி ரூ. 7,14,413 கோடியாக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், நிதிப் பற்றாக்குறை 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மத்திப்பீடுகளில் 36.5 சதவீதமாக இருந்தது. தற்போது 42.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.