பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளை தனிர்மயமாக்கும் அரசின் கொள்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து...

cpim sfi

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 5:51 pm IST

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) புதன்கிழமை (அக். 28) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு.

ஆர்பிஐ வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறுவதா?

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த ‘ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்திற்குத் தாரை வார்த்திட மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்திய வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவீதத்திற்கு மேல் வாக்குரிமை கொண்டிருக்கக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள வழிகாட்டுதல்களை, மத்திய அமைச்சரவை முடிவு அப்பட்டமாக மீறியிருக்கிறது.

நஷ்டம் பொதுத்துறைக்கு; லாபம் தனியாருக்கா?

ஐடிபிஐ வங்கி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்த நிலையில், அதன் 51 சதவீதப் பங்குகளை, மத்திய அரசின் கோரிக்கையின் பேரில் எல்ஐசி நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு, ஐடிபிஐ லாபம் ஈட்டும் நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வகையில், ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக, ஐடிபிஐ வங்கியின் பங்குகள் முந்தைய மதிப்பீட்டை விடக்குறைவான விலையில் தாரை வார்க்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே ‘கத்தோலிக் சிரியன் வங்கி’யின் 40 சதவீத பங்குகளையும் கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் கைப்பற்றி வைத்துள்ளது. ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த நிறுவனத்திற்கும், அதன் தணிக்கையாளர்களுக்கும், கடந்தகாலத்தில் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 வங்கிகளையும் தனியார்மயமாக்கத் திட்டம்:

ஐடிபிஐ வங்கி மட்டுமன்றி, ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’ போன்று லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தனியார்மயமாக்கல் என்பது சமூக நலன் சார்ந்த கடன் வழங்குதல் மற்றும்சிறு வைப்புதாரர்களின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில், சாமானிய மக்களுக்கு வங்கிச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதிலும் அனைவருக்கும் கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்வதிலும் பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய பொறுப்பைப் பெற்றிருக்கின்றன.

எனவே, பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைக் கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Communist Party of India (Marxist) (CPI(M)) urged the central government on Wednesday (Oct. 28) to abandon its plan to privatize banks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.