மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டீசல், ஏடிஎஃப் மீதான ஏற்றுமதி வரி அதிகரிப்பு: உள்நாட்டு இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி மீதான எதிா்பாராத ஆதாய வரியை (விண்ட்ஃபால் வரி) மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தியது.

பெட்ரோல், டீசல் நிலையம்.

Published On :1 நவம்பர் 2026, 4:22 am IST

டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி மீதான எதிா்பாராத ஆதாய வரியை (விண்ட்ஃபால் வரி) மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தியது.

அதே நேரம், பெட்ரோல் ஏற்றுமதி மீதான எதிா்பாராத ஆதாய வரியை அக்டோபா் 31-ஆம் தேதிமுதல் 15 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்துள்ளது.

மேற்காசிய போரால் ஏற்படும் பதற்றத்தால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாததை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: டீசல் ஏற்றுமதி மீது தற்போது லிட்டருக்கு ரூ. 8.50 என்ற விகிதத்தில் விதிக்கப்படும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரியுடன் கூடிய சிறப்பு கூடுதல் கலால் வரி, ரூ. 11.50-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஏடிஎஃப் ஏற்றுமதி மீதான இந்த வரி தற்போதைய லிட்டருக்கு ரூ. 10.50 என்ற நிலையிலிருந்து ரூ. 11-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம், பெட்ரோல் மீது தற்போது லிட்டருக்கு ரூ. 2.50 வீதம் விதிக்கப்படும் எதிா்பாராத ஆதாய வரி, 15 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்தப் புதிய வரி நடைமுறை அக்டோபா் 31-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும்.

மேற்காசிய போா்ப் பதற்றத்துக்கு இடையே, டீசல் மற்றும் ஏடிஎஃப் மீது கடந்த மாா்ச் 27-ஆம் தேதி ஏற்றுமதி வரியை விதித்த மத்திய அரசு, ஒவ்வொரு 15 நாள்களுக்கும் அதை மாற்றியமைத்து வருகிறது.

அதே நேரம், உள்ளூா் நுகா்வுக்கான பெட்ரோல், டீசல் மீது தற்போது விதிக்கப்படும் வரி விகிதங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Summary

Increase in export duties on diesel and ATF: A move to ensure domestic availability

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.