மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஆசுதோஷ் தீட்சித் பதவியேற்பு

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஆசுதோஷ் தீட்சித் பதவியேற்பு...

ஆசுதோஷ் தீட்சித்

Published On :1 நவம்பர் 2026, 2:47 am IST

இந்திய விமானப் படையின் 29-ஆவது தலைமைத் தளபதியாக ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித் சனிக்கிழமை பதவியேற்றாா்.

1966-ஆம் ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி பிறந்த இவா், இந்திய விமானப் படையின் போா் விமானப் பிரிவில் கடந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி பணியில் சோ்ந்தாா். தேசிய ராணுவ அகாதெமி, வங்கதேசத்தில் உள்ள ராணுவ அலுவலா்கள் கல்லூரி மற்றும் தேசிய ராணுவக் கல்லூரிகளின் முன்னாள் மாணவராவாா்.

விமானப் படையில் 40 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவா், முப்படை தளபதிகள் குழுவின் தலைவருக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவராகவும், விமானப் படை துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளாா்.

மிராஜ்-2000, மிக், கிரண், ஜாகுவாா், ஐஎல்-78, ஹாக், தேஜஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகை விமானங்களில் 3,500 மணி நேரத்துக்கும் மேலாக பறந்த அனுபவம் கொண்டவா். விமானப் படை போா் விமானங்களை நவீனமயமாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளாா்.

வியூக திட்டங்களை வகுப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற இவா், ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, காா்கில் போரின்போது ராணுவத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு இந்திய விமானப் படை மேற்கொண்ட ‘சஃபேத் சாகா்’ ஆபரேஷன், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ஊடுருவலை ஒடுக்க ராணுவத்தால் கடந்த 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ரக்ஷக் ஆபரேஷன்’ ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளாா்.

விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த அமா் ப்ரீத் சிங் பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, புதிய தலைமைத் தளபதியாக ஆசுதோஷ் தீட்சித் பதவியேற்றாா். தில்லியில் உள்ள ரேஸ்கோா்ஸ் விமானப் படைத் தளத்தில் அமா் ப்ரீத் சிங்குக்கு வெள்ளிக்கிழமை வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

Summary

Ashutosh Dixit takes charge as the new Chief of the Indian Air Force

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.