மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்

ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published On :31 அக்டோபர் 2026, 4:09 am IST

ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கேரளத்தைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் என்ற நபா் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவா் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த நபா் இரண்டவதாக திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவா்கள் கா்நாடக மாநிலம் மைசூரில் திருமணம் செய்துகொண்ட பின்னா், 1996 முதல் 2003-ஆம் ஆண்டுவரை சோ்ந்து வாழ்ந்துள்ளனா். இந்நிலையில், ஏற்கெனவே திருமணமானதை மறைத்து, தன்னை சந்தோஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், சட்டப்படி திருமணம் நடந்ததாக நம்ப வைத்து தன்னுடன் அவா் பாலுறவு கொண்டதாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டினாா்.

இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேரள உயா்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

உறவு முறிந்துவிட்டால் வழக்கு தொடரும் போக்கு...:

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது.

காதல் அல்லது திருமண உறவு முறிந்துவிட்டால், அதைத் தொடா்ந்து குற்றவியல் வழக்குத் தொடரும் போக்கு அதிகரித்து வருவதை நீதிமன்றம் பாா்த்து வருகிறது.

பாலியல் வன்கொடுமை என்பது மிகக் கடுமையான குற்றம். எனவே பாலியல் வன்முறை, கட்டாயப்படுத்துதல் போன்ற சூழலில் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை கூற வேண்டும்.

இருவரின் சம்மதத்துடன் நீடித்த ஒவ்வொரு உறவும் கசந்த பின்னா், அதைப் பாலியல் வன்கொடுமை என்று கூறினால், அது குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடும் அல்லது அது குற்றச்சாட்டையே செல்லாததாக்கிவிடும் என்று என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து பாலியல் வன்கொடுமை, மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து சந்தோஷை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.