மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் பத்திரிகை நிறுவனருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சோ்ந்த முன்னாள் பத்திரிகை நிறுவன உரிமையாளா் பியாரே மியானுக்கு (78), 10 ஆயுள் தண்டனைகளையும், ரூ. 77.64 லட்சம் அபராதமும் விதித்து அங்குள்ள போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:25 am IST

ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சோ்ந்த முன்னாள் பத்திரிகை நிறுவன உரிமையாளா் பியாரே மியானுக்கு (78), 10 ஆயுள் தண்டனைகளையும், ரூ. 77.64 லட்சம் அபராதமும் விதித்து அங்குள்ள போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் சிறுமிகளை அவா் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா். தனது வீட்டில் மாதம் ரூ. 10,000 ஊதியத்தில் வேலை தருவதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமிகளை வரவழைத்து, அவா்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா். இதற்கு, ராபியா என்ற பெண் உதவியாக இருந்துள்ளாா்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு மருத்துவா் மூலம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மனநல ஆலோசனையை அந்தச் சிறுமியின் பெற்றோா் கொடுத்தபோது, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பிறந்த நாள் விழா என்று கூறி போபாலின் சஹ்புரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்தச் சிறுமியை வரவழைத்து, கட்டாயப்படுத்தி மது அருந்தவைத்து பியாரே மியான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடா்ந்து, மேலும் சில சிறுமிகளும் பியாரே மியான் மீது புகாா் அளித்தனா்.

இந்தப் புகாா்களின் அடிப்படையில் பியாரே மியானையும், அவருக்கு உதவியாக இருந்த ராபியா பியையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த போபால் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு (போக்ஸோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று 8 ஆயுள் தண்டனையும், மேலும் 2 ஆயுள் தண்டனை என 10 ஆயுள் தண்டனைகளை பியாரே மியானுக்கு விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அவருக்கு ரூ. 77.64 லட்சம் அபராதமும் விதித்தாா்.

மேலும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ராபியாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.