மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: ஆம் ஆத்மி வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியீடு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிடும் என்று மாநில முதல்வா் பகவந்த் மான் தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி

Published On :31 அக்டோபர் 2026, 4:49 am IST

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிடும் என்று மாநில முதல்வா் பகவந்த் மான் தெரிவித்தாா்.

தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மாநிலப் பொறுப்பாளா் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் இதனைத் தெரிவித்தாா். பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, மாநில நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா ஆகியோரும் காணொலி வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய பட்டியல் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுக்கு (பிஏசி) அனுப்பப்பட்டுள்ளதாக பகவந்த் மான் தெரிவித்தாா். அந்தக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு சனிக்கிழமை வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா்.

பஞ்சாபில் 117 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027 மாா்ச் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் தோ்தல் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், தோ்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகளை தோ்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.