பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி!

பத்ரிநாத்தில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றி...

Helicopter

பத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து - x

Published On :30 அக்டோபர் 2026, 6:21 pm IST

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்திலிருந்து பக்தர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த விமானி உள்பட 6 பேர் பலியாகினர்.

பத்ரிநாத்திலிருந்து 5 பக்தர்களுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

பத்ரிநாத் மற்றும் ஜோஷிமத் இடையே உள்ள விஷ்ணுபிரயாக் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவத்திடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை உறுதி செய்துள்ள உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான துரதிர்ஷ்டவசமான செய்தி கிடைத்துள்ளது, நிலைமையை கண்காணித்து வருகிறேன். பயணிகள் பாதுகாப்பாகத் திரும்பி வர இறைவனிடம் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Helicopter returning from Badrinath meets with an accident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.