கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரண்டு சகோதரிகள் குழந்தைகளுடன் வெவ்வேறு கிணறுகளில் குதித்து தற்கொலை! 6 பேர் பலி

இரண்டு சகோதரிகள் குழந்தைகளுடன் வெவ்வேறு கிணறுகளில் குதித்து தற்கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.

Published On :29 அக்டோபர் 2026, 3:28 pm IST

மத்திய பிரதேச மாநிலம் பகுதியில், இரண்டு சகோதரிகள் தங்களது குழந்தைகளுடன் வெவ்வேறு கிணறுகளில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ஒரு சகோதரி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

சிஷ்புரி மாவட்டத்தில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அஞ்லி (35), தன்னுடைய 6 வயது மகனுடன் குர்கான் கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளனார். அவரது அக்கா சீதா (40) தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் கோங்கார் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்களும் வெவ்வேறு இடத்தில் நடந்திருந்தாலும், இறந்தவர்கள் சகோதரிகள் என்பதும், அதில் ஒருவர் கருவுற்றிருந்ததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

கர்ப்பிணியான அஞ்சலி இந்த துயர முடிவை எடுத்தபோது, அவரது மூன்று மகள்களும் அங்கு இருந்துள்ளனர். மூத்த மகள் கிணற்றில் விழுவதிலிருந்து தப்பித்து, தன்னுடைய சகோதரிகளையும் காப்பாற்றிக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து நடந்ததை சொல்லியிருக்கிறார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் அஞ்சலியின் கணவர் தர்மவீர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சீதா தன்னுடைய பிள்ளைகளுடன் விவசாய வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தேடும்போது, கிணறு அருகே செருப்புகளைப் பார்த்து தேடியபோது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், அஞ்சலி தன்னுடைய தற்கொலை முடிவு குறித்து சீதாவிடம் செல்போனில் கூறியிருப்பார். தன்னுடைய தங்கையின் இந்த துயர முடிவை தாங்க முடியாத சீதாவும் இதுபோன்ற முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Summary

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.