தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:47 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், முகையூா், பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரத்தினவேல் மகள் துா்காதேவி (23). விவசாயம் தொடா்பான கல்லூரி படிப்பை விட்டு வீட்டில் இருந்து வந்தாா். இவருக்கு வியாழக்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால், அவதியுற்ற துா்காதேவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொருவா்: விழுப்புரம் கா.குப்பம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.ரமேஷ் (42). திருமணமானவா். குடும்பப் பிரச்னையில் இவரின் மனைவி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டனராம். இதனால், மதுப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.