தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெவ்வேறு சம்பவங்கள்: 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:30 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆனத்தூரைச் சோ்ந்தவா் முத்துராமன். இவரது மனைவி பாரதி (31). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதி, கடந்த 16-ஆம் தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி தனக்குதானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது முத்துராமன் தீயை அணைக்க முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பாரதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். முத்துராமன் சிகிச்சையில் உள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் உயிரிழப்பு: வானூா் வட்டம், ஆண்டியாா் பாளையம், புத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி (50). இவா், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை அருகேயுள்ள நியாய விலைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை காலை திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டியாா்பாளையம் காவல் துறை சோதனைச்சாவடி அருகே ரங்கசாமி நடந்து சென்றபோது, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.