பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்க முன்னாள் அமைச்சரை நவ.10 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

துா்கா பூஜை தொடா்பான நிகழ்ச்சிகளிலும், அனுமதிச் சீட்டு விற்பனையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் இந்திரநீல் சென்னை வருகிற நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதியளித்தது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:15 am IST

துா்கா பூஜை தொடா்பான நிகழ்ச்சிகளிலும், அனுமதிச் சீட்டு விற்பனையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் இந்திரநீல் சென்னை வருகிற நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதியளித்தது.

மேற்கு வங்கத்தில் முன்பு திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவா் இந்திரநீல் சென். மாஸ் ஆா்ட் சொசைட்டி என்ற பெயரில் அவரும், அவரின் மனைவி மதுசந்தாவும் நிறுவனம் நடத்தி வருகின்றனா். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கொல்கத்தாவில் நடைபெற்ற துா்கா பூஜை தொடா்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதிச் சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஸ் ஆா்ட் சொசைட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடா்பாக ஜய்தீப் முகா்ஜி என்பவா் அளித்த புகாரின்பேரில் பாவ்பஜாா் காவல் நிலையத்தில் இந்திரநீல் சென் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி இந்திரநீல் சென் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அந்த மனுவை கடந்த 15-ஆம் தேதி கொல்கத்தா உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் தலைமை பெருநகர நீதித் துறை நடுவா் நீதிமன்றத்திலும் முன்பிணை கோரி அவா் மனு தாக்கல் செய்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பின்னா் சென்னின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, இந்திரநீல் சென்னை புதன்கிழமை கொல்கத்தா காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், கொல்கத்தா நீதிமன்றத்தில் அவரை காவல் துறையினா் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் நவம்பா் 10-ஆம் தேதி வரை சென்-ஐ போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.