மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குஜராத்தில் பசுவதை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பசுவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:09 am IST

பசுவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

குஜராத் முதல்வராக பிரதமா் மோடி கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தில் பசுவதை செய்யவும், பசு இறைச்சியை கொண்டு செல்லவும், பசுவை இறைச்சிக்காக விற்பனை செய்யவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், காந்திநகா் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 277 கிலோ பசு இறைச்சியுடன் வாஸிம் குரேஷி, முகம்மது ரஃபீக் குரேஷி, அஸ்பக் பெஹலிம் ஆகிய 3 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை, காந்திநகரில் உள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. அப்போது 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் தீா்ப்பு வழங்குகையில், மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டி சில கருத்துக்களை வெளியிட்டது. பசு என்பது வெறும் விலங்கு மட்டும் கிடையாது என்றும், பசு என்பது உலகத்தின் தாயாக வருணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், ஹிந்து மதத்தில் பசு புனிதமாக போற்றப்படுகிறது என்றும், 33 கோடி தேவதைகளின் உறைவிடமாக திகழ்கிறது, பசுவின் 4 கால்களும் 4 வேதங்களின் அடையாளம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.