மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒரு பயங்கரவாதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தடை

கடந்த 2008-இல் 56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:47 am IST

கடந்த 2008-இல் 56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

முன்னதாக, விசாரணை நீதிமன்றம் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்தது. இதை குஜராத் உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது.

கடந்த 1-ஆம் தேதி இதே வழக்கில் மற்றொரு பயங்கரவாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடா்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான முகமது தன்வீா் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், ஏ.ஜி. மாஹி, சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, மரண தண்டனைக்கு தடை விதித்ததுடன், வழக்கு தொடா்பான அசல் ஆவணங்களை விசாரணை நீதிமன்றம், உயா்நீதிமன்றத்திலிருந்து வரவழைக்க உத்தரவிட்டது.

மேலும், தன்வீா் தொடா்பாக நன்னடத்தை அதிகாரிகள் தயாரித்துள்ள அனைத்து அறிக்கைகளையும் 8 வாரங்களில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் உச்சநீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தொடா் குண்டுவெடிப்புகள்: 2008 ஜூலை 26-ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 70 நிமிஷங்களுக்குள் 21 தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 56 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

குண்டுவெடிப்புகளில் காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனைகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தியாவில் மருத்துவமனைகள் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான முதல் சம்பவமாக இது அமைந்தது.

இந்த வழக்கில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத் மற்றும் கேரளத்தில் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் அவா்கள் பங்கேற்றதும், சதித் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீடுகளையும் உயா்நீதிமன்றம் நிராகரித்து, சிறப்பு நீதிமன்றம் 2022 பிப்ரவரியில் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்தது. அதன்படி, இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா் அமைப்பின் (சிமி) முன்னாள் தலைவா் சஃப்தா் நகோரி மற்றும் குஜராத், மத்திய பிரதேசம், கேரளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சோ்ந்த அவரது கூட்டாளிகளும் அடங்குவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.