மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கர்ப்பிணி செய்தியாளரை தள்ளிய விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கிய பற்றி..

Supreme Court

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - ENS

Published On :27 அக்டோபர் 2026, 2:00 pm IST

அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில், பெண் செய்தியாளரை ராகுல் காந்தி தள்ளிவிட்ட புகார் குறித்து அவரிடம் மற்றவர்களிடமும் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு குறித்து முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வழக்கு என்ன?

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தலைநகர் தில்லியில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தில்லியில் கடந்த அக். 12ல் உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மூன்று மாதக் கர்ப்பிணி பத்திரிகையாளர் ரிச்சா பராஷர் என்பவரை தள்ளிவிட்டதாக புதிய புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், ராகுல் காந்தி மற்றும் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் புகார்தாரர் தரப்பில் கோரப்பட்டது.

இந்த நிலையில், ​​கர்ப்பிணிப் பெண் செய்தியாளர் தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும், மற்றவர்களிடமும் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.