மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசியல் நாகரிகத்தை மீறிய கார்கே? பாஜக கடும் கண்டனம்!

மோடிக்கு எதிராக கார்கேவின் கருத்துக்கு பாஜக குற்றச்சாட்டு..

BJP leader Sudhir Sharma

பாஜக தலைவர் சுதிர் சர்மா - file photo

Published On :27 அக்டோபர் 2026, 12:40 pm IST

பிரதமர் நரேந்தி ர மோடிக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துகள் அரசியல் நாகரிகத்தை மீறியுள்ளன என பாஜக தலைவர் சுதிர் சர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

காங்கிரஸ் கட்சியால் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளை எழுப்ப முடியவில்லை, அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காக அக்கட்சி தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறது.

பிகாரின் முதல் முதல்வரான ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்கே கலந்துகொண்டார். அப்போது பிரதமர் எங்கும் செல்ல மாட்டார்.. ஆட்சியை விட்டு இறங்க மாட்டார் என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார்.

​இதனால் நிதானமிழந்து கார்கே, மேடையிலேயே, மோடியை மட்டுமல்ல, அவருடைய அப்பாவாக இருந்தாலும் அனுப்புவோம் என்று தரக்குறைவான வார்த்தைகளால் ஆவேசமாகப் பதிலளித்தார். ​கார்கேவின் இந்தப் பேச்சால் அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கார்கேவின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் திங்கள்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். மேலும், கார்கேவும் காங்கிரஸ் கட்சியும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இத்தகைய கருத்துகள் ஒரு தேசிய அரசியல் கட்சிக்கு அழகல்ல, அவை அரசியல் விவாதத்தின் அடிப்படை நெறிமுறைகளை மீறும் வகையில் உள்ளன. இத்தகைய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் விரக்தியையே காட்டுகின்றன.

முக்கியமான மக்கள் பிரச்னைகளை எழுப்பத் தவறிய காங்கிரஸ், அரசியல் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்ள தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.