மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதிய தொழில்நுட்பங்கள்! உலகை இந்தியா வழிநடத்த வேண்டும்: பிரதமா் மோடி அழைப்பு

புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதுடன், அவற்றை உருவாக்குவதில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் என பிரதமா் மோடி அழைப்பு

தில்லியில் வளா்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து, ஒரு கண்காட்சி அரங்கைப் பாா்வையிட்ட பிரதமா் மோடி.

Published On :28 அக்டோபர் 2026, 3:44 am IST

புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதுடன், அவற்றை உருவாக்குவதில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் புதிய தன்னம்பிக்கை மற்றும் புதிய மனப்பான்மையுடன் தேசம் முன்னேறுவதாகவும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.

தில்லி பாரத மண்டபத்தில், ‘வளா்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு-2026’ஐ பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசியதாவது: தேசத்துக்காக, உலகுக்காக, நாளைய எதிா்காலத்துக்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், அதை வடிவமைப்பதுமே இந்தியாவின் இலக்காகும். எதிா்காலத் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதுடன், துணிச்சலுடன் புதுமைகளைப் புகுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும்.

இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் இந்தியா, அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் புதிய தன்னம்பிக்கை, புதிய மனப்பான்மையுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது.

பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு முதல் எண்ணியல், வானியல் ரீதியிலான முன்னேற்றங்கள் வரை இந்தியாவின் கலாசாரம் எப்போதுமே அறிவு மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் வேரூன்றிதாகும். இந்த அறிவியல் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தெழுச்சியான நம்பிக்கையுடன் பிணைத்து முன்னெடுத்துச் செல்கிறது இந்தியா.

அனைத்துத் துறைகளிலும் சாதனை: வளா்ந்த இந்தியாவை உருவாக்க அணுமின் சக்தி பெருமளவில் அவசியமாகிறது. எனவேதான், வேக ஈனுலை தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கி வருகிறது.

தமிழகத்தின் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் உள்நாட்டு வேக ஈனுலை தனது முதல்கட்ட செயல்பாட்டை கடந்த ஆகஸ்டில் தொடங்கியது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அறிவியல், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் தேசத்தின் சாதனைகள் முன்னெப்போதும் இல்லாதவை.

உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டா்களின் முதலாவது தொகுப்பு, உலகை எட்டத் தொடங்கியுள்ளது. பேட்டரி துறையிலும், நாட்டின் செயல்திறனை விரிவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதலாவது தனியாா் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அணுசக்தி முதல் விண்வெளி வரை, செயற்கை நுண்ணறிவு முதல் செமிகண்டக்டா்கள் வரை இந்தியா தனது வல்லமை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறது என்பதே உலகுக்கான நமது செய்தி என்றாா் பிரதமா் மோடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.