மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மும்பை - பெங்களூர் இனி 16 மணி நேரத்தில்! புதிய வந்தே பாரத் ரயில்கள்!

மும்பை - பெங்களூர் இனி 16 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் பற்றி...

Vande Bharat | IRCTC

வந்தே பாரத் | ஐஆர்சிடிசி - சித்திரிப்பு

Published On :26 அக்டோபர் 2026, 4:19 pm IST

நாட்டில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில் மும்பை - பெங்களூர், வாரணாசி - புது தில்லி இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.

பெங்களூர் - மும்பை இடையேயான ரயில் சேவை அக். 31ஆம் தேதி தொடங்கப்படவிருக்கிறது. இது 1000 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 16 மணி நேரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் சந்திப்பு முனையத்திலிருந்து சர் விஸ்வேஸ்வரய்யா முனையத்தை இணைக்கும். இந்த ரயில் கல்யாண், புனே, சோலாபூர், கலாபுராகி, ராய்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாகக் கடந்து செல்லும். இந்த ரயிலானது மகாராஷ்ரம் - கர்நாடக மாநிலங்களை ரயில் வழியாக இணைக்கிறது.

இது இரவு 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டால் முற்பகல் 11.55க்கு பெங்களூர் சென்றடையும். பெங்களூரிலிருந்து இரவு 7.50க்கு புறப்பட்டால் மறுநாள் முற்பகல் 11.5க்கு வந்தடையும்.

வாரணாசி - புது தில்லி சேவை நவ. 1ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. இது பிரயாக்ராஜ், கான்பூர் இடையே கடந்து செல்லும். வாரணாசியிலிருந்து இரவு 8.50க்கு புறப்பட்டு இரவு

வந்தே பாரத் படுக்கை வசதிகொண்ட முதல் ரயில் சேவை ஹௌரா - காமாக்யா இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இவ்விரு ரயில் சேவைகளும், தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிப்போருக்கு மிகுந்த பயனுள்ள சேவையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோருக்கும் இந்த ரயில் சேவை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.