மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிஜிட்டல் கொள்முதலில் ஊழல்: அதிகாரிகளை அடையாளம் காண உதவிய ஏஐ தொழில்நுட்பம்!

மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற ஊழல்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

AI

ஏஐ

Published On :26 அக்டோபர் 2026, 6:48 pm IST

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட கொள்முதல்கள் தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 135 தலைமை நகராட்சி அதிகாரிகள் உள்பட மொத்தம் 392 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் துபே தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “பல அதிகாரிகளிடமிருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சிலருக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் சிலரின் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம், போபாலில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் பேசிய சஞ்சய் துபே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த கொள்முதல் முறைகேடுகள் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தக் காணொலி தொடர்பாக மத்தியப் பிரதேச பாஜக அரசு மீது காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

அந்த பயிற்சி முகாம் பற்றிப் பேசிய அவர், “பயிற்சி முகாம் நடைபெற்றபோது, 146 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது 7 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவறு செய்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 392 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

'எம்பி இ-நகர் பாலிகா' மற்றும் 'அரசு இ-சந்தை' ஆகிய இரண்டு முக்கிய அரசு இணையதளங்களில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தணிக்கை செய்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Summary

Corruption in digital procurement: AI helps identify officials involved!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.