
10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நவ. 1-க்குப் பிறகு தில்லிக்குள் நுழைய முடியாது!
10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நவ. 1-க்குப் பிறகு தில்லிக்குள் நுழைய முடியாது என்பது பற்றி..

வாகனங்களுக்குக் கட்டுப்பாடு - ENS
பிஎஸ்6 வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் புது தில்லிக்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அருகமைப் பகுதியைச் சேர்ந்த வாகனங்கள் நவ. 1 முதல் தில்லிக்குள் நுழைய முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎஸ்6 வாகனங்களைத் தவிர்த்து அதற்குக் குறைவான தரம்கொண்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு பிறப்பித்துள்ள நிலையில், புது தில்லியில், 2026, நவம்பர் 1ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 31ஆம் தேதி வரை பிஎஸ் 6 வாகனங்கள் நுழைய முடியாது. இதனால், குர்கான், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு வகையான வாகனங்கள், புது தில்லிக்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது.
குர்கான் மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இன்னமும் பிஎஸ்3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள்தான் 70 சதவிகிதம் அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதனால், சொந்த பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் புது தில்லிக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்படும் என்பதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை மக்கள் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
அதாவது, தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பிஎஸ்6 தரக்கட்டுப்பாட்டுக்குக் குறைவான வாகனங்கள் புது தில்லிக்குள் நவ. 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நுழைவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





