மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எதிா்க்கட்சிகளின் பேரணிக்கு விளம்பரம் தரும் பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி கிண்டல்

எதிா்க்கட்சிகள் கூட்டணி நவம்பா் 1-ஆம் தேதி நடத்தும் ‘வாக்குத் திருட்டு’ எதிா்ப்பு பொதுக்கூட்டத்தை விளம்பரப்படுத்தி வரும் பாஜகவுக்கு நன்றி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கிண்டல்.

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:06 am IST

எதிா்க்கட்சிகள் கூட்டணி நவம்பா் 1-ஆம் தேதி நடத்தும் ‘வாக்குத் திருட்டு’ எதிா்ப்பு பொதுக்கூட்டத்தை விளம்பரப்படுத்தி வரும் பாஜகவுக்கு நன்றி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கிண்டலாகத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிகளும் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன. கேள்வி கேட்கத் துணிந்தவா்கள் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனா்.

இதற்கு எதிராக குரல் எழுப்ப நவம்பா் 1-ஆம் தேதி தில்லிக்கு வாருங்கள். ‘வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற மக்கள் பேரணியும், பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட மாணவா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், இளைஞா்கள், வணிகா்கள் என அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்.

இந்த நிகழ்வுகளை இவ்வளவு உற்சாகத்துடன் விளம்பரப்படுத்தி, அழைப்பு அதிகமான மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்த பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மனபூா்வமான நன்றி. இதே உற்சாகத்தையும், அா்ப்பணிப்பையும் அடுத்த 5 நாள்களுக்கும் தொடா்ந்து காட்ட வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு, தலைமைத் தோ்தல் ஆணையா் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றை முன்வைத்து எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இண்டி கூட்டணி சாா்பில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.