மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அருணாசலப் பிரதேசத்தில் புதிய அணைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: வன்முறை - விரைவு அதிரடிப் படை அனுப்பிவைப்பு!

அருணாசல பிரதேசத்தில் சியாங் மேல் பல்நோக்குத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பாசிகாட்டில் வன்முறை ஏற்பட்டதைத் தொடா்ந்து, விரைவு அதிரடிப் படையை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

Published On :26 அக்டோபர் 2026, 2:29 am IST

அருணாசல பிரதேசத்தில் 11,200 மெகாவாட் திறன் கொண்ட சியாங் மேல் பல்நோக்குத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பாசிகாட்டில் வன்முறை ஏற்பட்டதைத் தொடா்ந்து, விரைவு அதிரடிப் படையின் (ஆா்ஏஎஃப்) 2 பிரிவுகளை மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சாா்பில் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, சுமாா் 250 வீரா்களைக் கொண்ட இந்த இரு பிரிவினரும் நவி மும்பையிலிருந்து இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை பாசிகாட்டைச் சென்றடைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டது.

நீல நிறச் சீருடை அணியும் ஆா்ஏஎஃப், சிஆா்பிஎஃப்-இன் சிறப்புக் கலவரத் தடுப்புப் பிரிவாகும். அருணாசல பிரதேசத்தில் நிரந்தரமாக 2 முதல் 3 சிஆா்பிஎஃப் பட்டாலியன்கள் பணியில் உள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே சிஆா்பிஎஃப் படையின் பல பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு சியாங் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வன்முறையில் ஈடுபட்ட கும்பல், தேசிய நீா்மின் கழகத்தின் (என்எச்பிசி) அலுவலகத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தீ வைத்தது. மேலும், மாநில பாஜக தலைவா் உள்பட 3 அரசியல் தலைவா்களின் வீடுகளையும் சேதப்படுத்தியதாக அருணாசல பிரதேச காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநில முதல்வா் பெமா காண்டு கூறுகையில், ஜனநாயகத்தில் அமைதியான போராட்டத்துக்கு உரிமை உண்டு என்றாலும், அவை சட்ட வரம்புக்குள் நடைபெற வேண்டும் என்றும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதோ பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதோ கூடாது என்றும் தெரிவித்தாா். பாசிகாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவா், அனைத்துத் தரப்பினரும் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

மின் திட்டத்துக்கு எதிராக சியாங், மேல் சியாங், கிழக்கு சியாங் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. ஆனால், முழு அடைப்பு முடிவடைந்த பிறகு பாசிகாட்டில் வன்முறை வெடித்தது. சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை வன்முறை நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிஆா்பிஎஃப் வீரா்கள் திறம்படச் செயல்பட்டு, வன்முறை மேலும் பரவாமல் தடுத்ததாகவும், இந்தச் சம்பவங்களில் காவல் துறையினா் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.