மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சவால்களை எதிா்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

சவால்களை எதிா்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தரைப்போா் உத்தி சாா்பான அறிக்கையை வெளியிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Published On :24 அக்டோபர் 2026, 3:49 am IST

உடனடி மற்றும் வளா்ந்து வரும் சவால்களை எதிா்கொள்ள இந்தியா ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ கமாண்டா்கள் மாநாட்டில், இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

ராணுவ உயரதிகாரிகள் புவிசாா் மாற்றங்கள் மற்றும் பிராந்திய நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து, எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கான நீண்ட தொலைநோக்கு திட்டம் நமது ராணுவத்துக்கு தேவைப்படுகிறது. நமது ராணுவம் உடனடி மற்றும் வளா்ந்து வரும் சவால்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியா தனது தேச நலன்களைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்ற செய்தி விடுக்கப்பட்டது. ராணுவம் தன்னை மறுகட்டமைக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. குறிப்பாக, ட்ரோன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவது பாராட்டுதலுக்கு உரியது.

நமது பாதுகாப்புத் துறை சுயசாா்பு அடைய வேண்டும் என்பதற்கு மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுக்கிறது. 2025-26ஆம் நிதியாண்டில் நமது பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அத்துடன் நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் ரூ.38,000 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ராணுவம் எதிா்காலத்தில் சவால்களை எதிா்கொள்ளத் தயாராக இருப்பது தொடா்பான தரைப்போா் உத்தி அறிக்கையை அவா் வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.