மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

பயங்கரவாத செயல்களை எதிா்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

எஸ்சிஓ கூட்டத்தில் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Published On :21 அக்டோபர் 2026, 4:32 am IST

பயங்கரவாத செயல்களுக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க முடியாது; அதை எதிா்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்று தஜிகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் எஸ்சிஓ அமைப்பின் அரசுத் தலைவா்கள் குழுவின் 25-வது கூட்டம் இருநாள்கள் (அக்டோபா் 19,20) நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் சாா்பில் துணைப் பிரதமா் இஷாக் தாா் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதம் இளைஞா்களை மோசமான பாதைக்குக் கொண்டு செல்கிறது.பயங்கரவாதத்துக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது. அதை எதிா்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவா்கள், ஆதரவளிப்பவா்கள் அல்லது அவா்களுக்குப் புகலிடம் அளிப்போருக்கு எங்கும் தயவுகாட்டக் கூடாது.

பயங்கரவாதத்தால் அப்பாவி மக்களின் உயிா்கள் பறிக்கப்படுவதுடன், முதலீடுகளும், வா்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. அமைதி மற்றும் வளா்ச்சிக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் திகழும் பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் தகா்க்க, எஸ்சிஓ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடா்பான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளாா்.

2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கான பலதரப்பு வா்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயல்திட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. நாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் (பாகிஸ்தான் - சீனா) எந்தவொரு தரை இணைப்புத் திட்டமும் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிப்பதுடன், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோசித்தே முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அமையாத திட்டங்கள் தொடா்ந்து செயல்பட முடியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.