மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்

அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல் என்று அமித் ஷா கடுமையாக விமர்சனம்.

அமித் ஷா | ராகுல் காந்தி

Published On :22 அக்டோபர் 2026, 4:25 pm IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். நான் பேசுவது உங்களுக்குக் கேட்காது என்று எனக்குத் தெரியும், ஏன் வெளிநாடு சென்றிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனால் பரவாயில்லை, அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்றும் அமித் ஷா ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டுகளின் போர்வையில், சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் வாக்குகளை நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதை இந்த நாடு உணர்ந்துகொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு கிடைக்காது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. வாக்குச்சாவடி பணியாளர்கள் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை, பாஜகவினர் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைக்கிறார்கள் என்றும் கூறினார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பல மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை இழந்துவிட்டிருந்தது.

நீதிமன்றங்கள் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் அவர்கள் நியாயமாக நடப்பதாகக் கூறுவார் ராகுல். ஒருவேளை, உங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தால், நீதிமன்றத்தையே கேள்வி எழுப்புவீர்கள். இந்த இரட்டை நிலைப்பாடு எப்போதும் பயன்தராது ராகுல். தில்லியில் நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களால் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.