தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாஜக இரட்டை வேடம்! கார்கேவின் பேச்சுக்கு பிரியங்க் கார்கே ஆதரவு!

மோடியை விமர்சித்த கார்கேவின் கருத்துக்கு விளக்கம் அளித்த பிரியங்க் கார்கே பற்றி...

Priyank Kharge

கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 4:26 pm IST

கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தனது தந்தையும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பிகாரின் முதல் முதலமைச்சர் கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், மோடி எங்கேயும் போக மாட்டார் ஆட்சியை விட்டு இறங்க மாட்டார் என்று கூறினார்.

​இதனால் நிதானமிழந்து கார்கே, மேடையிலேயே, மோடியை மட்டுமல்ல, அவருடைய அப்பாவாக இருந்தாலும் அனுப்புவோம் என்று தரக்குறைவான வார்த்தைகளால் ஆவேசமாகப் பதிலளித்தார். ​கார்கேவின் இந்தப் பேச்சால் அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. குரலெழுப்பிய அந்த நபரை காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்க் கார்கே,

முக்கியமற்ற விஷயங்களைக்கூடப் பெரிய பிரச்னையாக்குவதில் பாஜகவுக்கு ஆர்வம் அதிகம்.

இந்தக் கருத்து எந்தச் சூழலில் கூறப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சியிலிருந்த பாஜக ஆதரவாளர் ஒருவர், உங்களாலோ அல்லது உங்கள் தந்தையாலோ மோடிக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விடுத்தார். அதற்குப் பதிலடியாகவே மல்லிகார்ஜுன கார்கே அவ்வாறு கூறினார் என்று பிரியங்க் விளக்கமளித்தார்.

அது ஒரு உடனடிப் பதில் மட்டுமே. எந்த மொழியாக இருந்தாலும், மக்கள் பொதுவாகப் பேசும்போது இப்படித்தான் பேசுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

மேலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் குறித்து முன்பு தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டிய பிரியங்க் கார்கே, பாஜக இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார்.

பாஜக தனது சொந்த வரலாற்றையும் திரும்பிப் பார்க்க வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மேடையில் வைத்து, ராஜீவ் காந்தி குறித்து மோடி அவதூறாகப் பேசினார். அதேபோல், இந்திரா காந்தி குறித்துப் பேசிய அமித் ஷா, உங்கள் பாட்டி சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் திரும்பி வந்தாலும், அவரது டிஎன்ஏ-வை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார் என்று பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

தங்களை நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் என்ன பேசினார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

நீங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தாலும் சரி, நூறு பேர் வந்து எங்களை இணையத்தில் விமர்சித்தாலும் சரி, எதையும் மாற்ற முடியாது. நாங்கள் இவர்களிடமிருந்து நாகரிகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.