கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போராட்டங்கள் பயனற்றவை.. பஞ்சாபில் என்டிஏ ஆட்சி அமைக்கும்! அமித் ஷா

தில்லியில் ரூ. 8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசிய அமித் ஷா...

Shah slams Opposition

தில்லியில் அமித் ஷா - x

Published On :22 அக்டோபர் 2026, 2:01 pm IST

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்டி ஷா, போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை, பஞ்சாபில் அடுத்த அரசாங்கத்தை என்டிஏ அமைக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

தில்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு ரூ. 8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் அமித் ஷா.

அப்போது அவர் பேசியதாவது,

எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு, வாக்குத் திருட்டு நடந்ததாக ஆளும் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் பல பத்தாண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இல்லை என்பதை நினைவுப்படுத்துகிறேன்.

தில்லியில் முந்தைய காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் கழிவுநீர் ஆற்றில் கலக்க அனுமதித்ததாகவும், தற்போது பாஜக அரசு அந்தக்கழிவு நீரைக் குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலைத் தாக்கிப் பேசிய ஷா, வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சாக்குப்போக்கு அரசியல் ஆம் ஆத்மியைக் காப்பாற்றாது என்றார்.

பஞ்சாப் மக்கள் ஒரு என்டிஏ அரசை விரும்புகிறார்கள், தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடையும். யமுனையைச் சீரமைத்தப் பிறகு 2029-ல் மக்கள் ஆதரவை பாஜக கோரும்.

பஞ்சாபில் என்டிஏ அரசு அமைந்த பிறகு, தற்போது நிலவும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.