தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்

பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...

K.C. Venugopal

கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ

Published On :26 அக்டோபர் 2026, 8:10 pm IST

பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (அக். 26) தெரிவித்தார்.

சண்டிகரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கே. சி. வேணுகோபால் பேசியதாவது:

''சண்டிகரில் மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர்கள், மூத்த தலைவர்கள், வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உடனான நேரடி ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் அனைத்து தலைவர்களிடம் இருந்தும் கருத்துகள் ஏற்கப்பட்டுள்ளன. அதனால்தான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், பஞ்சாபில் 2027 பிப்ரவரியில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

நாட்டின் முக்கியமான மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்றாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பஞ்சாபின் நிலையை கவனியுங்கள். வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் அழுத்தத்தில் உள்ளனர். வேலையில்லாததால் இளைய தலைமுறையினர் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். பஞ்சாபில் வசித்துவரும் குடும்பங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே செல்கிறது.

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. போதைப்பொருள் மாஃபியாக்கள் எங்கும் பரவியுள்ளனர். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

போதைப்பொருள் கும்பல்களைக் கட்டுப்படுத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய காவல்துறையே, தற்போது அவர்களுக்குப் பாதுகாப்பளித்து வருகிறது.

இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த வன்முறையும் போதைப்பொருள் கலாசாரமும் ஒழிக்கப்பட வேண்டும். பஞ்சாபில் அமைதியை நிலைநாட்ட காங்கிரஸ் உறுதியுடன் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Congress will form the government in the 2027 Punjab elections: K.C. Venugopal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.