தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராய்ப்பூரில் குடியரசுத் தலைவர் முர்மு! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

ராய்ப்பூரில் நினைவு நாணய வெளியிடும் குடியரசுத் தலைவர் பற்றி..

President Murmu

குடியரசுத் தலைவர் முர்மு - X

Published On :22 அக்டோபர் 2026, 1:21 pm IST

சத்தீஸ்கரில் இரு நாள் பயணம் மேற்கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராய்ப்பூர் வந்தடைந்தார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜகதல்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த குடியரசுத் தலைவர் முர்முவை, ஆளுநர் ராமன் தேகா, முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் மக்கள் மன்றத்திற்கு சென்றடைந்தார். அங்கு பூஜ்ய மாதா ஹாசி தேவி அவர்களின் நினைவாக நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார்.

மேலும், நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு, ராய்ப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 'சேவா சம்மான் பர்வ்' மற்றும் 'யுவ பிரபோதன்' ஆகிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

வெள்ளிக்கிழமையன்று, பஸ்தார் மாவட்டத்தின் தலைமையகமான ஜகதல்பூரில் நடைபெறும் 'முரியா தர்பார்'நிகழ்வில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.

'முரியா தர்பார்' என்பது பழங்குடியினரின் பாரம்பரியம். இது பஸ்தார் தசரா திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வுகளை முன்னிட்டு, ராய்ப்பூர் மற்றும் பஸ்தாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; மேலும், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.