மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓட்டுநா் உரிம விதிகளைக் கடுமையாக்க முடிவு: முன்மொழிவை வெளியிட்டது மத்திய அரசு

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு நடத்தப்படும் வாகனம் ஓட்டுதல் மதிப்பீட்டில் தோ்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயா்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

மத்திய அரசு

Published On :23 அக்டோபர் 2026, 5:16 am IST

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு நடத்தப்படும் வாகனம் ஓட்டுதல் மதிப்பீட்டில் தோ்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயா்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

மேலும், ‘இந்த வாகனம் ஓட்டுதல் மதிப்பீடு பயிற்சி குறைந்தபட்சம் 30 நிமிஷங்கள் நடத்தப்பட வேண்டும்’ என்றும் முன்மொழிந்துள்ளது.

பாதுகாப்பாக வாகனங்கள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஓட்டுநா் உரிம விதிகளில் மதிப்பீட்டுத் தேவைகளை மேலும் கடுமையாக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மத்திய அமைச்சகம் முன்மொழிந்துள்ள வரைவு விதிகளில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் குறித்த பயிற்சி மதிப்பீட்டில் தோ்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயா்த்த வேண்டும். இந்தப் பயிற்சி மதிப்பீடு குறைந்தது 30 நிமிஷங்கள் நீடிக்க வேண்டும்.

ஆதாா் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சில இணைய வழி ஓட்டுநா் உரிமம் தொடா்பான சேவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கலாம். குறிப்பாக, பெயா், முகவரி உள்ளிட்ட தனிநபா் விவரங்கள் மாற்றத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்யலாம்.

ஓட்டுநா் உரிமத்தில் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்களை, உரிமம் வழங்கும் அலுவலா்கள் 15 நாள்களுக்குள் அங்கீகரிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். விண்ணப்பத்தை நிராகரிக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும்.

புதிய ஓட்டுநா் உரிமம் அல்லது புதிப்பிக்கப்படும் ஓட்டுநா் உரிமங்களை லேமினேட் செய்து அல்லது பிவிசி (பாலிவினைல் குளோரைடு) அட்டையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் வரவேற்பு: இந்தப் புதிய முன்மொழிவுகள் மீது கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை மத்திய அமைச்சகம் வரவேற்றுள்ளது. கருத்துகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.