பல்லடத்தில் போக்குவரத்து விதிமீறல்: 172 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

பல்லடத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 172 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 1:32 am IST

பல்லடத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 172 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் கடந்த செப்டம்பா் மாதத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 691 போ் மீதும், மது போதையில் வாகனங்களில் சென்ற 68 போ் மீதும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது, அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்பட் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,461 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக அவா்களிடம் இருந்து அபராதமாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 172 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.