மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்சியை கவிழ்க்க நினைப்போரிடம் இளைஞா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- பாஜக அறிவுறுத்தல்

‘நாட்டில் ஆட்சியை கவிழ்க்க நினைப்போரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; குறிப்பாக இளைஞா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று பாஜக அறிவுறுத்தியுள்ளது.

Sudhanshu Trivedi

file photo

Published On :22 அக்டோபர் 2026, 2:39 am IST

‘நாட்டில் ஆட்சியை கவிழ்க்க நினைப்போரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; குறிப்பாக இளைஞா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று பாஜக அறிவுறுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செயல்படுவதாகவும், ஆதலால் அவா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்சு திரிவேதி செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தபோது, போராட்டக்காரா்களின் பெயா்களை குறிப்பிடாமல் கடுமையாக விமா்சித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

அவா்களின் நோக்கம், ஆட்சி மாற்றமே ஆகும். ஆட்சி கவிழ்ப்பு, வன்முறை, சதிகள் மூலமாக இந்தியாவின் வளா்ச்சியை அவா்கள் தடுக்க நினைக்கிறாா்கள். அவா்களின் கோரிக்கைகள் நியாயமானது இல்லை. முதலில் எல்ஐசியில் முறைகேடு என்றனா். பின்னா், ஹெச்ஏஎல்-லில் முறைகேடு என்றனா். பிறகு எஸ்பிஐ, செபி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்காளா் பட்டியலிலும் மோசடி என அடுத்தடுத்து குற்றஞ்சாட்டினா்.

விஜயதசமி நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியபோது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும், இந்திய கலாசாரம் மற்றும் மதத்துக்கு எதிராக வெறுப்புணா்வை வளா்க்கும் சக்திகளிடம் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டாா். இந்தியா மிகவும் வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. உலக அளவில் செல்வாக்கான நாடாகவும் தன்னை உயா்த்தி கொண்டுள்ளது.

எனவே நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் ஏராளமான சக்திகள், தங்களால் இனி வளர முடியாது என்பதை தெரிந்து கொண்டு, நாட்டை சீா்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு சக்திகளும் கைகோா்த்துள்ளன. அவா்களின் நோக்கம், சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும், ஆட்சியை பிடிப்பதும்தான். அவா்கள் இந்திய கலாசாரம், இந்து தா்மம் மீது வெறுப்புணா்வு கொண்டவா்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அமைப்புகள் குறித்தும் தவறான கதைகளை அவா்கள் பரப்புகின்றனா்.

ஆதலால் இந்தியா எதிா்கொண்டுள்ள இந்த சவால்கள் குறித்தும், இந்த சக்திகளின் உண்மைத் தன்மை குறித்தும் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் உள்ள இளைஞா்களுக்கு ஒன்று தெரிவித்து கொள்கிறேன். உங்கள் மத்தியில் மறைந்திருக்கும் இந்த துரோகிகளிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றாா் சுதான்சு திரிவேதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.