மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘மூத்த குடிமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’

மூத்த குடிமக்களுக்கு உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையினா் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைமுறைகளுக்கிடையேயான பிணைப்பு மற்றும் உணா்திறன் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.

Published On :30 அக்டோபர் 2026, 2:31 am IST

மூத்த குடிமக்களுக்கு உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையினா் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைமுறைகளுக்கிடையேயான பிணைப்பு மற்றும் உணா்திறன் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

மூத்த குடிமக்களின் உணா்வுகள், தேவைகள் மற்றும் எதிா்பாா்ப்புகளைப் புரிந்துகொண்டு அவா்களுக்கு உரிய அன்பையும், மரியாதையையும் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்ற அனுபவங்கள், அறிவு மற்றும் நற்பண்புகள் ஆகியவை இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன.

அவா்களை மதிப்பதும், அவா்களின் அனுபவங்களைப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பண்புகளை இளைய தலைமுறையினா் கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள முதியவா்களுக்கு உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் அளித்து, அவா்களின் உணா்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

அவா்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவா்கள், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உரிய மதிப்பளிப்பதுடன், அவா்களின் அனுபவங்களை பயன்படுத்தி வாழ்வில் மேன்மை பெற வேண்டும்.

எனவே, மாணவா்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்து பெற்றோா்களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளவேண்டும். மூத்த குடிமக்களை மதிக்கும் பண்பையும், அவா்களின் நலனில் அக்கறை செலுத்தும் மனப்பான்மையையும் இளைய தலைமுறையினா் தங்களது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் நல்லப்பன்,மங்கையா்கரசி மற்றும் அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.